தேவையான பொருட்கள்:
வாழைபழம் - 3
ஆப்பிள்/பேரிக்காய் - 2
ஆரஞ்ச் ஜுஸ் - 100 மி.லி
ஸ்ட்ராபெர்ரி - 3 கையளவு
சர்க்கரை - 5 டீஸ்பூன் (குறிப்பாக எளிதில் திருப்திப்படுத்த முடியாத குழந்தைகளுக்காக)
செய்முறை:
ஆப்பிளின் தோலுரித்த பிறகு, அதன் மையப்பகுதியை நீக்கிக் கொள்ளவும்.
வாழைப்பழங்களின் தோலை உரித்து, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின் எல்லாவற்றையும் ப்ளெண்டரில் போட்டு, நன்றாக பேஸ்டாக வரும் வரை கலக்கவும்.
பின்பு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி ப்ளெண்டரில் போட்டு, சர்க்கரை சேர்த்து, 5-8 விநாடிகள் மெதுவாக கலவையை கலக்கவும்.
பின்பு ஆரஞ்சு சாற்றை சேர்த்து 2 விநாடி கலக்கவும்.
இப்போது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் பழ பேஸ்ட்டானது தயாராகியிருக்கும்.
பிறகு ஒரு கண்ணாடி ஜாடியில் அதனை ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைத்து, இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தலாம்.
குறிப்புகள்:
சிறிது பெரிய குழந்தைகளுக்கு, இக்கலவையுடன் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து கொடுப்பது மிகவும் ஆரோக்கியமானது.
எச்சரிக்கைகள்:
* 1 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தேன் சேர்க்கக் கூடாது. அது அவர்களுக்கு கெடுதலை செய்யும்.
* அதிக சர்க்கரை சேர்க்க கூடாது, அது புதிதாக வளரும் பற்களுக்கு கெடுதலை செய்யும்.