Author Topic: நான் ரசித்த கவிதை...!  (Read 1992 times)

Offline Yousuf

நான் ரசித்த கவிதை...!
« on: October 20, 2011, 03:12:12 PM »


ஒன்னாம் வகுப்பில் எனக்கு பாக்கெட்மணி 5 பைசா,
2ம் வகுப்பு போனபோது 10 பைசா,
3ம் வகுப்பு போனபோது 20 பைசா.
5ம் வகுப்பில் நாலனா,
6ம் வகுப்பில் எட்டனா,
10ம் வகுப்பில் ஒரு ரூபா,
கல்லூரிக்கு 5 ரூபா
(இப்போ மாதிரி பாக்கெட்மணி என்கிற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது... “வாங்கி திங்கற காசு” என்று தான் சொல்வோம்

5 காசுக்கே மீன் முட்டாய்,தேன் முட்டாய்,சளி முட்டாய்,ஆரஞ்சு முட்டாய், இப்படி எதுவானாலும் ஐந்து வாங்கலாம்

கொன்னவாச்சி பாட்டியாவிடம் சக்கரை முட்டாய் கிடைக்கும்.அந்த பாட்டியை பிடிக்காதவர்கள் அதை ‘கோழிப்பீ முட்டாய்’ என்று கிண்டல் செய்வார்கள்

10 காசுக்கு பம்பர முட்டாய் கிடைக்கும்.அதன் நடுவே உள்ள இரண்டு கோர்க்கப்பட்ட கயிறை நன்றாக சுழற்றினால் முருக்கிக்கொல்ளும்.பிறகு அதை இழுத்து இழுத்து விட்டால் சுற்றிக்கொண்டே இருக்கும்.

நாலனாவுக்கு ஆசைமுட்டாய்.அதை மிட்டாய்க்காக வாங்கமாட்டோம் அதில் சுற்றப்பட்ட காகிதத்தை இழுப்பதற்க்காகவே வாங்குவோம்.அதை சின்ன ஸ்கேல் அள்விற்க்கு இழுத்து விட்டால் ஒரு டப்பா ஆசை இலவசம் என்று வதந்தி வேறு.

50 பைசாவுக்கு கொஞ்சம் பனக்காரமிட்டாய்கள் வாங்கலாம்.

அப்போது பூமர் பபுல்கம் பிரபலம்.நானும் என் நண்பனும் ஆளுக்கு 50 காசு போட்டு ஒரு பூமர் வாங்கி ஆளுக்கு பாதி கடித்து பார்த்தோம்.ஆனால் அதில் பெரிய மொட்டிலி வரவில்லை.பிறகு ரெண்டு நாள் காசை சேர்த்து ஒரு நாள் பூமர் வாங்கி மொட்டிலி விடுவோம்

அந்த மொட்டிலியில் சத்தம் மட்டுமே வராது கூடவே எண்ணற்ற சந்தோசமும் வந்தது... ஆனால் இப்பொழுது வெறும் சத்தம் மட்டுமே வருகிறது
“அது ஒரு அழகிய நிலாக்காலம்”

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நான் ரசித்த கவிதை...!
« Reply #1 on: October 20, 2011, 03:27:21 PM »
nice

aana ithu kvithaya kathayaaa ::)
                    

Offline RemO

Re: நான் ரசித்த கவிதை...!
« Reply #2 on: October 20, 2011, 04:40:01 PM »
nice

aana ithu kvithaya kathayaaa ::)


Same doubt
ana arumai


Offline Yousuf

Re: நான் ரசித்த கவிதை...!
« Reply #3 on: October 20, 2011, 05:00:55 PM »
Kavithaiyo Kathaiyo nalla irunthuchula...! ;D ;D ;D