Author Topic: காதலில் சுழலும் உலகம்..  (Read 719 times)

Offline PiNkY

"காதலில் சுழலும் உலகம்.."
இதை நான் பல முறை கேட்டிருக்க..
இன்று இதை உணர்கிறேனடா..!
ஆபத்தில் உதவிய உன் கரம் பிடித்து நடக்கையில்..

நீ யாரோ ..?
என்னை விடியும் இந்த பொழுதிற்கு முன் நடக்கயிருந்த..
ஆபத்திலே.. ரௌதிரமாய் வந்து காப்பாற்றிய ..
உன் கரங்கள்..!

இந்த கரத்தை.. ஏன்..? இத்தனை நாட்களும் நான் சந்திக்கவில்லை..?!!
என்னை நீ அறியாய்.. நானும் உன்னை அறியேன்..
உன் பெயரை நானும் .. என் பெயரை நீயும் அறியாதிருக்க..
என் ஆபத்தில் உதவிய உன் கம்பீரமும்.. ரௌத்திரமும்..
என் மனதை கொள்ளை கொண்டது ..

ஆதவன் தன் ஆயிரம் கரங்களை விரித்து ..
நீ வாழும் .. இந்த அதிசய பூமிக்கு வரும் முன்..
உன்னவளாக நான் மாற விரும்புகிறேன் அடா..!!

மிக சிறிய நேரத்தில்..
நீ என்னவனாக.. என் இதயத்தில் நுழைந்துவிட்டாய்..
உன் வாழ்வில் எனக்கு இடம் இல்லாவிட்டாலும்..
உன் கரங்களை பிடித்து நடக்கும் ..
இந்த இனிய நேரத்தையாவது கொடு..
என்னவனே.. என் உயிரில் கலந்தவனே.. !!
      (என்று பெண் மனம் துடிக்க.. உணர்ந்த ஆணின் மனம் வார்த்தைகளாய்..)

  அடி பெண்ணே..!
கரம் பிடித்து நடக்க மட்டும் அல்ல..
என் இதயத்தில் உனக்கு இடம் கொடுத்துவிட்டேன் அடி..!
உன் கரம் கோர்த்த நொடியே. ..
என் மனம் உன்னை தேட ஆரம்பித்துவிட்டது...

உன்னை இப்போது பிடித்த இந்த உதவி கரம்..
இனி என் காதலை உனக்கு அள்ளி கொடுக்கும்..! கரமாகவும்..
உன் அன்பை அணைக்கும் கரமாகவும்..
உன் வாழ்கையில் துணை வரும்..

என் கம்பீரத்தில் வீழ்ந்த உன் மனமும்..
உன் கன்னக்குழியில் புதைந்த என் இதயமும்..
நாம் கரம் கோர்த்து நடக்கும் இந்த பாதையை..
நம் காதல் ஓவியத்திற்கு .. உயிரளிபதாய் மாற்றும்..

என் தோளில் சாய நீ வேண்டும்..  அடி என்னவளே..!



                                                                                        Writtn By.,
                                                                                         PiNkY..

Offline Global Angel

Re: காதலில் சுழலும் உலகம்..
« Reply #1 on: April 12, 2013, 07:01:49 PM »

வரிகள் அருமை மிக நன்றாகவே கவிதை எழுதுறேங்க .... தொடர்ந்து எழுதுங்க ஒரு பெண் எந்த சந்தர்ப்பத்தில் எப்படி பட்ட ஆடவனை காதல் கொள்வாள் என்பது அருமையான வெளிப்பாடு தொடரட்டும் உங்கள் பயணம்
                    

Offline PiNkY

Re: காதலில் சுழலும் உலகம்..
« Reply #2 on: April 13, 2013, 12:46:42 PM »
வந்து வாசித்தமைக்கு., மிக நன்றி.. தங்கள் ஆசைப்படி மேலும் எழுதுவேன் .. என்ன இருந்தாலும் தங்கள் அளவுக்கு கவி புலமையும், தமிழ் புலமையும் என்னிடம் இல்லை...

 :(

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: காதலில் சுழலும் உலகம்..
« Reply #3 on: April 13, 2013, 01:04:13 PM »
நம் காதல் ஓவியத்திற்கு .. உயிரளிபதாய் மாற்றும்..
என் தோளில் சாய நீ வேண்டும்..  அடி என்னவளே.


தோல்லில் சைவுது தனி சுகமே பின்கி ....நல்ல கவிதைகள் ...உங்களை மாதிரியே அழகா இருக்கு கவிதையும் மேலும் தொடருங்கள் நன்றி

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதலில் சுழலும் உலகம்..
« Reply #4 on: April 13, 2013, 01:20:40 PM »
இருமனங்களின் எண்ணவோட்டத்தையும் அழகாய் வெளிப்படுத்தியிருக்கீங்க பிங்கீ வாழ்த்துக்கள், தொடர்க நடை..
அன்புடன் ஆதி

Offline PiNkY

Re: காதலில் சுழலும் உலகம்..
« Reply #5 on: April 13, 2013, 03:27:23 PM »
ஆதி மிக்க நன்றி நண்பா.. தங்கள் வாசித்து., கருத்து தெரிவித்தமைக்கு நான் மகிழ்கிறேன்..



வருண் ஹ ஹா .. நன்றி நண்பா..