தெரியுமா தற்கொலை செய்துகொள்ளும் எலிகளை?

ஆர்டிக் பகுதி நாடுகளில் குறிப்பாக நார்வே நாட்டில் காணப்படும் லேம்மிங்க்ஸ் (Lemmings) எனப்படும் எலிகளின் இனபெருக்கம் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மிக அதிகமாக பெருகிவிடும். உடனடியாக அக்கூட்டத்தில் உள்ள சற்று வயதான எலிகள் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கும் அதாவது கூட்டமாக தற்கொலை (Mass Suicide) செய்துகொள்வதென. அதற்கான நாட்கள் நெருங்கியவுடன் அவையனைத்தும் ஒருஇடத்தில் கூடும் பின்னர் அவை கடல் இருக்கும் திசையை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும். அவை செல்லும் வழியில் வரும் தடங்கல்களை பற்றி கவலைபடாமல் பல நூறு மைல்கள் கூட நடந்து செல்லும். இறுதியாக அவை கடற்கரையில் வந்துசேர்ந்ததும் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும். சில ஆராய்ச்சியாளர்கள் இவை தற்கொலை செய்துகொள்வதில்லை. இவை இனபெருக்கத்தின் காரணமாக அதிகமாக பெருகிவிட்டதால் புதிய இடத்தை தேடி செல்வதாக கூறுகிறார்கள் (எது எப்படியோ அவை தற்கொலைசெய்துகொள்வது நமக்கு கண்ணீரை வரவழைக்கும் என்பது உண்மை)