பார்க்காமலேயே காதல் வரும்
அது திரையில்
பார்க்காமலேயே நட்பு வரும்
அது தளத்தில்
திரையிலே வரும் காதல்
மூன்று மணி நேரத்தில் முடிந்துவிடும்
தளத்திலே வரும் நட்பு
வாழும் வரை நீடிக்க வேண்டும்
திரைக்காதலுக்கு
ஆரம்பம் உண்டு
இடைவேளை உண்டு
முடிவு உண்டு
தள நட்புக்கு
ஆரம்பம் மட்டுமே உண்டு
இடைவேளையும் முடிவுமின்றி
என்றும் வாழும் தமிழைப் போல
இந்த நட்பும் வாழவேண்டும்