Author Topic: பச்சரிசி அல்வா  (Read 625 times)

Offline kanmani

பச்சரிசி அல்வா
« on: April 06, 2013, 11:52:43 AM »
என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 3 கப்
கடலை பருப்பு - 1 கப்
வெல்லம் -2 கப்
நெய்- 100 கிராம்
முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு
எப்படி செய்வது?

பச்சரிசி மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் கடலை பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஓரளவுக்கு திடமாக இருக்க வேண்டும். பருப்பு வெந்தவுடன் அதில்  அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்துவரும். தண்ணீர் கையில் தொட்டு மாவை தொட்டுப் பார்த்தால் ஒட்டாது  இருக்க வேண்டும் இதுதான் பதம்.

வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். வெல்லத்துடன் கரைத்த தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து  வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும். முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது  இறக்கிவிடவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறினதும் பரிமாறவும்