Author Topic: கம்பு இலை அடை (இனிப்பு)  (Read 594 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

கம்பரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - அரை கப்,
வெல்லம் - அரை கப்,
முந்திரி - 6,
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவியது - கால் கப்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
வாழை இலை - 5.
எப்படிச் செய்வது?

மேல் மாவுக்கு...
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும்  போட்டு கைவிடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவும். மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டியில்லாமல் மிருதுவாகப் பிசைந்து  வைக்கவும்.

பூரணம் செய்ய...

கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வேகவிட்டு எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்து  எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். அதில் இந்த பூரணத்தை போட்டு சுருள கிளறவும். கிளறியதும் தேங்காய் துருவல்,  ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி ஆறவிடவும். வாழை இலையை லேசாக எண்ணெய் தடவி வெறும் தணலில் காட்டவும். அதில் கம்பு மாவை  வைத்து தட்டி பூரணத்தை உள் வைத்து இலையை மூடி இட்லி பானையில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 4 பாரம்பரிய இந்த இனிப்பு  அடையை கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.