Author Topic: தெலங்கானா பிரியாணி  (Read 611 times)

Offline kanmani

தெலங்கானா பிரியாணி
« on: April 06, 2013, 11:42:21 AM »
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 2 கப்
பீன்ஸ் - 100 கிராம்
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - கால் கப்

தாளிக்க:
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
பிரியாணி இலை - 1
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்

எப்படி செய்வது ?

அரிசியை களைந்து 45 நிமிடம் ஊறவையுங்கள். பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியை நறுக்கி, லேசாக எண்ணெய் விட்டு வதக்கி பேஸ்டு போல செய்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.

வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், தக்காளி பேஸ்ட், இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பைச் சேர்த்து கிளறுங்கள். காய்கறிகள் முக்கால் பதம் வதங்கியதும் தயிர் கலந்து இறக்குங்கள். ஊறவைத்த அரிசியில் இந்த காய்கறிக் கலவையை சேர்த்து வேக வையுங்கள். அரிசியும் காய்கறிக் கலவையும் சம அளவில் இருக்க வேண்டும். அதிகம் தண்ணீர் சேர்க்காதீர்கள். சாதம் வெந்ததும் பதம் பார்த்து இறக்குங்கள். குழையக்கூடாது.

தம் கூட்டுவதற்கு எளிதான ஒருவழி. தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் வையுங்கள். அந்த தண்ணீரில் பிரியாணி பாத்திரத்தை 10 நிமிடம் வைத்தால் போதும். பிரியாணி பொல பொல என உதிரியாகிவிடும்!