Author Topic: வரகு முறுக்கு  (Read 787 times)

Offline kanmani

வரகு முறுக்கு
« on: April 06, 2013, 11:34:24 AM »
என்னென்ன தேவை?

வரகரிசி - 1 கப், பொட்டுக்கடலை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1 கப்,
வெண்ணெய் - 100 கிராம்,
சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எள், ஓமம் - தலா அரை டீஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு,
எண்ணெய் - 1 லிட்டர்.

எப்படிச் செய்வது?

வரகரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து அரைக்கவும். பொட்டுக்கடலை மாவையும்கடலைமாவையும் சேர்த்து சலிக்கவும். அதை வரகரிசி மாவுடன் கலந்து வைக்கவும். அதில் வெண்ணெய், எள், ஓமம், சூடான எண்ணெய், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும். தேவையான தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக முறுக்குகளைச் சுட்டு எடுக்கவும். ஒரு மாதம் வரைக்கும் முறுக்கு கெடாது.4 வரகு அரிசியை ஆட்டி செய்தால் மட்டுமே கெடாது. ‘வரகரிசி மாவு’ என்று விற்கப்படும் ரெடிமேட் மாவில் செய்தால் ஒரு வாரம் வரை மட்டுமே தாங்கும்.