என்னென்ன தேவை?
தினை அரிசி - 1 கப்,
பாலும் தண்ணீரும் கலந்து - 6 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய்யில் வறுத்த முந்திரி,
திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
குக்கரில் காய்ச்சிய பாலும் தண்ணீருமாக சேர்த்து வைத்து, தினை அரிசியை சேர்க்கவும். தணலை குறைத்து, குக்கரை மூடி, விசில் போட்டு 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து குக்கரை திறந்து கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்துக் கலந்துவிடவும். வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து சூடாகப் பரிமாறவும். 4 தினை அரிசி குழைந்து கட்டியாகிவிடும். எனவே, நன்றாகக் கிளறிவிட்ட பின் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும். அடுப்பில் இருந்து இறக்கிய பிறகே சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை சேர்த்தபின் அதிகம் கிளறக்கூடாது.