என்னென்ன தேவை?
ராகி மாவு - 1 கப்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய மிளகாய்வற்றல் - 3,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தண்ணீர் - தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு...
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ராகி மாவை உப்பும் எண்ணெயும் சேர்த்து தண்ணீர் விட்டு சிறிது இளக்கமாகப் பிசையவேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.வதக்கிய பொருள்களை ராகி மாவுடன் சேர்த்து பிசைந்து 10 நிமிடங்கள் வைக்கவும், தோசைக்கல்லில் எண்ணெய் தடவி மாவை கையில் எடுத்து, கல்லில் தட்டி இரு புறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும், மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.4 கடலை எண்ணெயில்சுட்டால் சுவை நன்றாக இருக்கும். எவ்வளவு அதிகம் வெங்காயம் போடப்படுகிறதோ அந்த அளவுக்கு வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.