Author Topic: வரகு பொங்கல்  (Read 710 times)

Offline kanmani

வரகு பொங்கல்
« on: April 06, 2013, 11:28:06 AM »
என்னென்ன தேவை?
வரகரிசி - 1 கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
தண்ணீர் - 4 கப்,
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
நெய்யும் எண்ணெயுமாக சேர்த்து - கால் கப்,
கடுகு - ஒரு சிட்டிகை,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
முந்திரி - 8, சீரகம் - கால் டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை -  சிறிது.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பயத்தம் பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து, அந்தச் சூட்டில் வரகரிசியைப் போட்டு வறுக்கவும்.  அதை இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து  சூடாக்கி, கடுகு, உ.பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து  கிளறவும். சூடான கொத்சு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். 4 மிளகை சிறிது பொடித்து சேர்த்தால் மணமும் காரமும் கூடும். குக்கரில் நேரடியாக  வைப்பதை விட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேக வைத்தால் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.