என்னென்ன தேவை?
கம்பு மாவு - கால் கப்,
தினை மாவு - கால் கப்,
ராகி மாவு - கால் கப்,
பனைவெல்லம் - முக்கால் கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
உப்பு - 1 சிட்டிகை,
தண்ணீர் - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு சிறிய குழிக்கரண்டி.
எப்படிச் செய்வது?
மூன்று மாவுகளையும் ஒன்றாகக் கலந்து உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும். பனை வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். மாவில் சூடான வெல்லத் தண்ணீரை விட்டு நன்றாக மிருதுவாக ஆகும் வரை பிசையவும். கொழுக்கட்டை அச்சிலோ அல்லது சிறு உருண்டைகளாக உருட்டியோ ஆவியில் வேக வைக்கவும்.4 பனைவெல்லம் உடலுக்கு மிகவும் நல்லது. சாதாரண வெல்லம் சேர்த்தும் செய்யலாம். விரும்பினால் தேங்காய் துருவல், உலர் பருப்புகளை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.