Author Topic: பீட்ரூட் சூப்  (Read 714 times)

Offline kanmani

பீட்ரூட் சூப்
« on: April 06, 2013, 09:56:25 AM »
 தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - அரை கிலோ
வெங்காயம் -1
எண்ணெய் - 3
மேஜைக் கரண்டி உருளைக்கிழங்கு - 1
துருவிய எலுமிச்சம் பழத் தோல் - அரைக் கரண்டி
எலுமிச்சம் பழச் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ளவும்.

எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத் தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

15 நிமிடங்கள் வரைஇவற்றை கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும்.

புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.