Author Topic: பங்களா பாத்  (Read 585 times)

Offline kanmani

பங்களா பாத்
« on: April 06, 2013, 09:21:48 AM »
தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப் பால் -2 கப்
 மில்க்மெய்ட் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5 உலர்ந்த
திராட்சை - 5
ஏலக்காய் பொடி
உப்பு
நெய்

செய்முறை:

 வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும்.

 ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும்.

பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும்.

பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

 பிறகு இதை சிறிய கப்புகளில் ஊற்றி அதன் மீது முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும்.