Author Topic: காரமான மல்வானி சிக்கன் குழம்பு  (Read 544 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது)
வெங்காயம் - 4 (நறுக்கியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
மிளகு - 5 ஏலக்காய் - 2
அன்னாசி பூ - 1
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

சிக்கனை ஊற வைப்பதற்கு...

இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 5 பல்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - 1/2 கட்டு
ஜாதிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்

 செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீர் முழுவதையும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொண்டு, அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, மிளகு, அன்னாசி பூ, ஏலக்காய் சேர்த்து வதக்கி, பின் அதில் பாதி வெங்காயத்தை போட்டு, நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் துருவிய தேங்காயை போட்டு, அடுத்த 3-4 நிமிடம் வதக்கி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை சேர்த்து, மீதமுள்ள வெங்காயத்தையும் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, 2-3 நிமிடம் மசாலாக்கள் அனைத்தும் சிக்கனுடன் சேருமாறு பிரட்ட வேண்டும்.

அடுத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, வேண்டிய அளவில் தண்ணீர் சேர்த்து, குழம்பை நன்கு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான மல்வானி சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.