Author Topic: ருசியான மைக்ரோவேவ் பாஸ்தா!!!  (Read 539 times)

Offline kanmani

1. மைக்ரோவேவ்வின் கிண்ணத்தில் பாதி கிண்ணம் நிறையும் வரை பாஸ்தாவை போடவும். மைக்ரோவேவ் கிண்ணம் என்பது கண்ணாடி அல்லது மண்ணில் செய்ததாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தக் கூடாது.

2. பின்னர் பாஸ்தா மூழ்குமளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்தால் பாஸ்தா உப்பை உறிஞ்சிக் கொண்டு சுவையை மேலும் கூட்டும். மேலும் உப்பு போட்டு செய்வதால் பாஸ்தாக்கள் சீக்கிரமாக வெந்துவிடும்.

3. தண்ணீரில் உப்பு போட்டது போக, சிறிது எண்ணெய் சேர்க்கலாம். உப்புக்கு பதிலாக சிறிது வினீகரையும் சேர்க்கலாம்.

4. பின்னர் அந்த கிண்ணத்தை ஒரு தட்டில் வைத்து மைக்ரோவேவ் ஓவனுக்குள் வைக்கவும். வேகும்போது தண்ணீர் தட்டில் பொங்கி விழாதபடி தேவையான அளவு தண்ணீரையே பாஸ்தா வேக வைக்க ஊற்ற வேண்டும்.

5. பாஸ்தா வேக வைக்க கூறப்பட்டுள்ள நேரப் படி வேக வைக்கவும். 3 அல்லது 4 நிமிடங்கள் அதிகமாக வேக வைக்கலாம். மைக்ரோவேவ்வின் தன்மையைப் பொறுத்து, நேரத்தை கூட்டியும் குறைத்தும் வைக்கலாம்.

6. பாஸ்தா வெந்ததா என்று ஒன்றிரண்டை எடுத்து சரிபார்க்கவும். வேகவில்லையெனில், இன்னும் சில நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.

7. நன்கு வெந்ததும் மைக்ரோவேவ் ஓவனிலிருந்து எடுத்து அதிலிருக்கும் தண்ணீரை வடிகட்டி வெளியேற்றவும். இதற்கு சல்லடைகளை பயன்படுத்தலாம். இதனால் அவை நீரை முற்றிலுமாக வெளியேற்றி விடும்.

8. பின்னர் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமலிருக்க சிறிது எண்ணெய் கலந்து வைக்கவும்.

9. 35 நிமிடங்கள் சாஸை மைக்ரோவேவ் ஓவனில் சூடு படுத்தவும். இதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம்.

10. பின்பு சாஸுடன் பாஸ்தாவை கலக்கவும். இப்பொழுது சுவையான பாஸ்தா ரெடி.

 குறிப்புகள்:

பாஸ்தாக்கள் மேலும் சுவையாக இருக்க, அதனுடன் காய்கறிகள் அல்லது இறைச்சி வகைகளை சேர்க்கலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சி அல்லது காய்கறிகளை மைக்ரோவேவ்விலிருந்து சிறிது முன்னரே எடுத்து விடவும். ஏற்கனவே வேக வைத்த காய்கறி அல்லது இறைச்சி வகைகளை மறுபடியும் சூடு படுத்த நினைத்தால் சாஸுடன் சேர்த்து வேகவிடலாம். மைக்ரோவேவ்விலிருந்து எடுத்த பின்பு பாஸ்தாக்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம்.