கடல் பாசி பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
கன்டண்ஸ்ட் மில்க் - அரை டின்
மஞ்சள் ஃபுட் கலர் - கால் தேக்கரண்டி
டின் கார்ன்
உப்பு - ஒரு சிட்டிகை
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முக்கால் லிட்டர் தண்ணீரில் கடல் பாசி பவுடரைப் போட்டு கரைத்து நன்கு கொதிக்க விடவும். (கடல் பாசி பவுடர் இல்லையெனில் ஒரு கைப்பிடி அளவு நேச்சுர் கடல் பாசி பயன்படுத்தலாம்).
அதனுடன் மஞ்சள் ஃபுட் கலர், உப்பு சேர்க்கவும்.
பின்பு கன்டண்ஸ்ட் மில்க்கை ஊற்றி, கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
விருப்பமான மோல்டில் சிறிது டின் கார்னை போடவும்.
கலந்து வைத்துள்ள கடல் பாசியை அதில் மெதுவாக ஊற்றவும்.
கார்ன் போடாமல் வெறும் மோல்டில் ஊற்றியும் வைக்கலாம்.
நன்றாக ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.