Author Topic: இது தான் இல‌ங்கை ச‌ட்ட‌ம்  (Read 1951 times)

Offline thamilan

ம‌க்க‌ளின் தூக்க‌த்தில்
ந‌ம்பிக்கை வைத்து
க‌ன்ன‌மிட்ட‌ன‌ர் க‌ள்வ‌ர்க‌ள்

விழித்திருந்த‌ நாய்க‌ள்
க‌ல‌வெடுக்க‌ வ‌ந்த‌ நாய்க‌ளை
துர‌த்திக் க‌டித்த‌ன‌

க‌டித்த‌ நாய்க‌ள்
சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌
ச‌ட்ட‌ம் சொன்ன‌து
க‌டிப்ப‌து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்

ர‌க‌சிய‌மாக‌ கூடிப் பேசிய‌
ச‌திகார‌ர்க‌ளின் முக‌ங்க‌ளை
வெளிச்ச‌ம் போட்டுக் காட்டின‌
விள‌க்குக‌ள்

அம்ப‌ல‌ப்ப‌டுத்திய‌ விள‌க்குக‌ள்
அடித்து நொருக்க‌ப்ப‌ட்ட‌ன‌
ச‌ட்ட‌ம் சொன்ன‌து
ர‌க‌சிய‌ங்க‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த‌லாம்

பூப்பூவாக‌ தேடித்தேடி
தேனை சேக‌ரித்த‌ன‌ தேனீக்க்க‌ள்
அதை எடுக்க‌ வ‌ந்த‌
குற‌வ‌ர்க‌ளை கொட்டு விர‌ட்டின‌
தேனீக்க‌ள்

கொட்டுய‌ தேனீக்க‌ள்
கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌
ச‌ட்ட‌ம் சொன்ன‌து
கொட்டுவ‌து வ‌ன்முறையாம்

Offline Yousuf

Re: இது தான் இல‌ங்கை ச‌ட்ட‌ம்
« Reply #1 on: October 14, 2011, 05:41:20 AM »
Miga nalla kavithai aniyaayaththai yethirthaal athu bayangaravathamaaga karuthappadukirathu ithu ilangayil mattum illai thamilan machi ulagam muluvathum ithey nilai thaan...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இது தான் இல‌ங்கை ச‌ட்ட‌ம்
« Reply #2 on: October 18, 2011, 06:08:08 PM »
sarvathikarathin munnaal sagalamum ipdithaan  :(


nalla kavithai thamilan :)