Author Topic: ~ "மழைக் கவிதைகள்" ~  (Read 2336 times)

Online MysteRy

~ "மழைக் கவிதைகள்" ~
« on: March 31, 2013, 09:14:02 PM »



மழையை ரசித்தபொழுதொன்றில்
பறந்து வந்து என்னோடு
ஒதுங்கிக்கொண்டது சருகொன்று,
முழுதாய் நனைந்துவிடப் பயம் போலும்
எனைப்போலவே...

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #1 on: March 31, 2013, 09:15:28 PM »



ஒரு கூடை மழை
ஒரு கடல் போல
என் மீது காதலை
தூவி விட்டு சென்றிருக்கிறது.

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #2 on: March 31, 2013, 09:16:51 PM »



ஓய்ந்த மழைக்குப் பின்
நனைந்த இலைகளின் நுனியில்
சொட்டிக் கொண்டிருக்கின்றது
மழையென்ற பெயரையிழந்த
நீர்த்துளி

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #3 on: March 31, 2013, 09:19:42 PM »



சர சர வென சத்தம்-
சலங்கையும் தோற்றதடா!
பட பட வென விழுதே-
என் வீட்டுத் தகரம் மெத்தளமோ!

தள தள வென வளர்ந்தது-
தோட்டத்துப் பயிர்களுமே!

சிலு சிலு வென என் தேகம்-
நான் நனைகயிலே!
அனுதினமும் நான் எதிர்பார்க்கிறேன்-
அந்தக் கிராமத்து மழையை!

நித்தம் பார்க்கையில் வெறுக்கிறேன்-
இந்த நகரத்து மழையை!

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #4 on: March 31, 2013, 09:27:35 PM »



சாயங்காலம்
வானத்திலிருந்து வந்தது முதல்
ஒரே பேச்சுதான்...
இந்தப் பூஞ்செடியும் மழையும்
என்னதான் பேசுகிறார்களோ

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #5 on: March 31, 2013, 09:32:01 PM »



மழைக்காலங்களில்
உன் குடையாக
மாறவே
ஏங்குகிறது...

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #6 on: September 20, 2013, 08:12:42 PM »



- மழைக் காளான்கள் -

விடியும் வரை ஓயவில்லை
தகரக் கூரையுடனான
மழையின் பேச்சு

தூங்கியவன் மனத்தையும்
கழுவிப் போயிருக்கிறது
இரவில் பெய்த மழை

வான்தூறும் சொட்டு மழை
அடர்பாசி வாய் பிரித்துக்
குடிக்கிறது குளம்

முன்னெப்போதும் போலவே
புதிதாய்ப் பெய்கிறது
அதே பழைய மழை

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #7 on: September 20, 2013, 08:14:51 PM »



வெகுநாட்களுக்குப் பின்
மீண்டும் அதே மழை...
அதே ஈரம்..
அதே இதம்...
மௌனமெனும்
ஆடை களைந்து
தூரக் காற்றில்
தூக்கிவீசிப்
பறக்கவிட்டு
நனைந்து நனைந்து
நனைந்து தீர்க்கிறது
நம் காதல்

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #8 on: September 20, 2013, 08:16:09 PM »



குடை பிடிக்கும் அம்மாவின்
விரல் பற்றி நனைந்த புத்தகமூட்டையுடன்
உணவுக்கூடை சகிதமாய்
மழைக்கான விடுமுறை கனவோடு
வந்தடைவேன் பேருந்து நிறுத்தத்திற்கு..

வராததாய் நினைத்து மகிழ்ந்து காத்திருக்கும் சமயத்தில்
தாமதித்து வந்த பேருந்தில் ஏற மனமில்லாமல் ஏறி
பள்ளியிலும் காத்திருப்பைத் தொடர்திருப்பேன்
கவலையோடு கடைசி மணியின் சத்தத்திற்கு..

மழை விட்ட தூவானத்தில் மாலையில் வீடு திரும்பி
அம்மா செய்த சூடான பஜ்ஜியையும் பிடிக்காத காபியையும்
தூறலில் விளையாடிக் கழித்திடுவேன் காய்ச்சல்
வந்தேனும் விடுமுறைக் கொடுக்காதா என்று..

மழை ரசித்து, மழைக்கு பயந்து, மழைக்கு ஒதுங்கி,
மழையால் மகிழ்ந்து, மழையால் நொடிந்து
வாழ்ந்த அந்த அழகிய மழைக்காலங்கள்
இன்று வெறும் கனாக்காலங்கள் ஆகிப்போகிறது
மழைக்கான ஸ்டேட்டஸ்களோடும் !!
பழைய நாட்களின் ஏக்கங்களோடும் !!

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #9 on: September 20, 2013, 08:17:15 PM »



கவிதை படைத்து காத்திருக்கிறேன்
ஒரு பெருமழைக்காக..!
அம்மழையோ தரைவீழ்ந்து தவம் கிடக்கிறது
மழலையின் கப்பலுக்காக..!!

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #10 on: September 20, 2013, 08:18:28 PM »



மண் வாசனை"

வானம்
நில பெண்ணிற்கு விடும்
காதல் தூது..

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #11 on: September 20, 2013, 08:19:27 PM »



கை நீட்டி மழை பிடித்து அன்னையின் முகத்தில் விசிறிச் சிரிக்கும் இடுப்புக் குழந்தை ..
குடைக்குள்ளே இருந்தாலும் எட்டி எட்டி நனைக்கிறதே மழை ...
என்று அலுத்துக் கொள்ளும் தாய் ...
சலனமின்றிப் பெய்து கொண்டிருக்கும் மழை

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #12 on: September 20, 2013, 08:22:49 PM »



அவசரமாக ஓடி வந்து
ஜன்னல் கதவின்
கொக்கிகளை எடுத்துச்
சாத்துகையில் முகத்தில்
செல்லமாக தெறிக்கிறது
சாரல் வீட்டிற்குள்
வீட்டுக்கு வெளியே பெய்கிறது
மழை..

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #13 on: September 20, 2013, 08:24:52 PM »



உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
மழைதான்
குறைக்கிறது

Online MysteRy

Re: ~ "மழைக் கவிதைகள்" ~
« Reply #14 on: September 20, 2013, 08:25:55 PM »



குட்டித் தங்கையின் மழை

மழையின் ஒவ்வொரு துளியும்
அதனை முழுமையாக ரசிப்பதற்கு
இடம் தருவதேயில்லை.

ஒரு துளியின் பிரமாண்டம் அதை
விட்டும் பார்வையை
அகலச் செய்வதேயில்லை.

மழை
ரசனையின் பாடல்.

ஒவ்வொருவரும் அதனை
ஒவ்வொரு வயதில்தான்
புரிந்து கொள்கிறார்கள்.

குட்டித் தங்கை
சின்னச் சின்ன மழைத்துளிகள்
சேர்த்து வைப்பேனோ பாடலை
எழுதி மனனமிட்டுக் கொண்டு
அடுத்த மழைக்காகக் காத்திருக்கிறாள்.