Author Topic: பெண் தேடிய ராஜகுமாரன்..  (Read 813 times)

Offline PiNkY

(ஒரு பெண் தான்  காதலிக்காத  மற்றும் அவள்  வெறுத்த  ஒருவனை ,  மணக்கும்  வேளையில் அவன்  அன்பை  புரிந்து  கொண்டு  சொல்லும்
 கவிதை) :
 
   நான்  தேடிய  ராஜகுமாரன் நீ அல்ல.,
  ஆனால் உன்  பண்பு நான் தேடிய ராஜகுமாரனிலும்  உயர்ந்தது ..
   
  நான் உனக்காக தவம் இருக்கவில்லை.,
  ஆனால் இனி உன் மகிழ்ச்சிக்காக மட்டுமே தவம் இருப்பேன்..
   
  உன்னை பார்த்ததும் காதல் மலரவில்லை.,
  ஆனால் இனி  நீ  பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும்  என்னுள் காதல் மலரும்..
   
   நான் உன் காதலை உணர்ந்த இந்த தருணம்.,
   என்னை  நான் வெறுக்கிறேன் அன்று  உன்னை  வெறுததற்கு..
 
  உன்னை புரிந்து கொண்ட இந்த தருணம்.,
  "நான் உன்னை நேசிக்றேன்., நேசிப்பேன்  என்றென்றும்.."

                                                                   ...Written By.,
                                                                   ...PiNkY...

Offline sasikumarkpm

Re: பெண் தேடிய ராஜகுமாரன்..
« Reply #1 on: March 31, 2013, 12:31:59 PM »
சொந்த அனுபவமோ pinky???? :P வரிகள் வளர வாழ்த்துக்கள்.. :)
சசிகுமார்..

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பெண் தேடிய ராஜகுமாரன்..
« Reply #2 on: March 31, 2013, 12:39:14 PM »
நான் உனக்காக தவம் இருக்கவில்லை.,
ஆனால் இனி உன் மகிழ்ச்சிக்காக மட்டுமே தவம் இருப்பேன்..   
உன்னை பார்த்ததும் காதல் மலரவில்லை.,
ஆனால் இனி  நீ  பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும்  என்னுள் காதல் மலரும்..



பின்கி இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...காதலில் தவம் இருக்கறது ஒரு சுகம் தானே
   

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

Re: பெண் தேடிய ராஜகுமாரன்..
« Reply #3 on: March 31, 2013, 12:42:39 PM »
சொந்த அனுபவம் தான் சசி அதை நான் இந்த கவிதை எழுதிய பின்தான் உணர்ந்தேன்,..


வருண் .. நன்றி நண்பா ஆனாலும் உங்களை போல் கவிதை எழுத என்னால் முடியாதே ..