Author Topic: ~ இரத்த அழுத்தம் ~  (Read 608 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226378
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இரத்த அழுத்தம் ~
« on: March 30, 2013, 02:18:24 PM »
இரத்த அழுத்தம்




மக்களை அச்சுறுத்தும் நோய்களில் குறிப்பிடத்தக்கது, உயர் இரத்த அழுத்த நோய். இது எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்காமல், ஓசையின்றி மனிதனை உயிராபத்துக்கு இட்டுச் செல்லும் நோயாகும். இளம் வயதினர் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.


ஆண்டு தோறும் 70 இலட்சம் பேர் இந்த நோயால் இறக்கிறார்கள். இதய நோய் பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோயை ஏற்படுத்துவதிலும் உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணியாக உள்ளது.

இரத்தக் குழாய் மூலம் இதயத்திலிருந்து இரத்தம் செல்லும் போது இரத்தக்குழாய் சுவர்களுக்கு எதிராக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இரத்த அழுத்த அளவானது இதயத்தின் சுருங்கிய இயக்க அழுத்தம், இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் என்னும் இரண்டு அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டது.

இயல்பு நிலையில் இதயத்தின் சுருங்கிய அழுத்தம் 120 ஆகவும், இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் 80 ஆகவும் இருக்க வேண்டும். அதாவது 120:80 என்றிருக்க வேண்டும். ஆனால் 140:90 இற்கு அதிகமாக இரத்த அழுத்த அளவீடு இருக்குமானால் அது உயர் இரத்த அழுத்தமாகும். இதன் மருத்துவப் பெயர் ஹைப்பர்டென்ஷன்’ என்பதாகும். குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இரத்த அழுத்த அளவு 140:90 ஆக இருந்தால், அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாக இருந்தால் இரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை அடுத்தடுத்த நாட்களில் பரிசோதித்த பிறகும் இரத்த அழுத்தம் உயர்வாக இருந்தால் அவரை உயர் இரத்த அழுத்த நோயாளி எனக் கூறலாம்.