ஆதி அவர்களே தங்களின் சிரத்தை என்னை சிந்தை சிலிர்க்கச் செய்கிறது..
தெளிவாகவே கூறுகிறேன், அகநானுற்று பாடல் ஒன்றினை சாரமானது,
பாட்டுடைத்தலைவனை தலைவனை குறைத்துக்கூறும் தோழியிடம் தலைவி காதல் மயக்கம் கொண்டு பின்வறுமாறு கூறுகிறாள்,
என் தலைவனின் அழகும் வீரமும் என் கண்வழியாய் பார்க்கப்பெரும்போது அதன் சிறப்பே தனி என்று..
அது போலத்தான், பத்து ரூபாயும் பாரத தேசமும்.. என் கண்களுக்கும் உம் கண்களுக்கும் வெவ்வேறாய் தெரிகிறது..
உமக்கு அப்படி தெரிவதனால் எனக்கு என்நட்டமும் இல்லை.. எனக்கு தெரிகின்ற அனைத்தும் உமக்கும் தெரிய வேண்டிய நிர்பந்த்தமுமில்லை..
நான் வெவ்வேறு மொழி, மாந்தரின் உடல்வாகு, வேறுபட்ட இயற்கை அமைப்பால் பிளவுபட்டு கிடக்கும் மாநிலங்களை தேசங்களாக உருவகப்படுத்தி பார்க்க எண்ணி இருந்தேன்..
மற்றும்,
புத்தன் மெய்ஞானி இல்லையா என நீங்கள் கேட்பது எனக்கு விளங்கவில்லை, இன்னும் சற்று என்நிலைக்கு இறங்கி வினவுங்களேன்..