இளம்பெண் கைபுக புதுவெட்கம் கொண்டேன்,
உழைப்பாளிக்கு உணவாய் மேல்தகுதி கண்டேன்,
நித்தம் பலதேசம் கண்டு பரதேசியானேன்,
இரண்டொருதரம் லஞ்சமாகியும் வெட்கிப்போனேன்,
திருநாளில் அர்ச்சகரின் கரம் புகுந்தேன்,
மறுநாளில் மதுக்கடையில் மாய்ந்து போனேன்,
கல்விக்கும் கலவிக்கும் சமமாய் சென்றேன்,
பலரின் மோகம் தீர்த்து நவீன வேசியானேன்,
ஒருதடவை சாலையோரம் தொலைக்கப்பட்டேன்,
மறுதடவை "ஆயிரங்களுக்கிடையே" சொர்கம் கண்டேன்,
சில்லரை சகோதரர்களுகு மாற்றாய் போனேன்,
சிலநேரம் எனை நினைந்த்து வேதனைப்பட்டேன்,
பாகுபாடின்றி பலர்கைபட்டு புத்தனானேன்,
பகுத்தறியாத மனம்கொண்டு பித்தனானேன்,
இறுதியில் எனைக்கிழித்து நகை கொண்ட
மழலையின் எச்சில் அருந்த தேவனானேன்!!!!!!