Author Topic: ~ குட்டிக்கவிதைகளை ~  (Read 992 times)

Offline MysteRy

~ குட்டிக்கவிதைகளை ~
« on: March 27, 2013, 06:04:41 PM »
புன்னகை



பூக்கள் பூக்கும் தருணம்
பார்த்ததாரும் இல்லையே.,
என்றெல்லாம் கவி
புனைகிறார்கள்...

உன் புன்னகையைப்
பார்க்காமல்..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #1 on: March 27, 2013, 06:05:54 PM »
இடியும் மின்னலும்



எங்கேயோ
பெய்கிறது
மழை...

ஆனால்..,

எதிர்விட்டு
ஜன்னலில்
ஒரு மின்னல்..

என் இதயத்தில்
இடி..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #2 on: March 27, 2013, 06:07:02 PM »
தூண்டிலில் மீன்



மீன் பிடிக்கும்
மீனவன்...

தூண்டிலில்
மீனாக..

பல முறை
கடலுக்கும்..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #3 on: March 27, 2013, 06:08:05 PM »
மழை



கொஞ்சிப் பேசும்
பிஞ்சுக் குழந்தையை,
யார் திட்டியது...?

இப்படி அழுகிறாள்..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #4 on: March 27, 2013, 06:09:16 PM »
ஞாபகம்



இரவில் திரியும்
மின்மினிப் பூச்சிகளும்,

கூண்டில் சிறகடிக்கும்
வெள்ளைப் புறாவும்,

இன்றும் ஞாபகப்
படுத்துகிறது...

உன் கண் சிமிட்டலை..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #5 on: March 27, 2013, 06:12:32 PM »
அப்பா



தான் வளர்கையில்
முதல் வில்லன்..

தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #6 on: March 27, 2013, 06:14:40 PM »
அன்பின் அளவு



அன்பை அளவிட
முடியாதாம்...

ஏன் முடியாது..!?

என் தாயின் எடை
ஐம்பது கிலோ..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #7 on: March 27, 2013, 06:15:48 PM »
நிச்சயதார்த்தம்



நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #8 on: March 27, 2013, 06:18:00 PM »
புகைப்படங்கள்



நமது
வண்ணமயமான
வாழ்க்கையின்
பக்கங்களை
புரட்டிக் காட்டுகிறது...

"கருப்பு வெள்ளை"
புகைப்படங்கள்..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #9 on: March 27, 2013, 06:20:06 PM »
தந்தை



உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
இல்லை...

அதை என்
நெஞ்சில் சுமந்து
தீர்த்துக் கொள்கிறேன்..!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #10 on: March 27, 2013, 06:21:10 PM »
விரையப் பொருட்கள்



விவசாயத்திற்காக
கடன் வாங்கி...

இன்னும்
விற்பனைக்கு போகாமல்,
வீட்டைக் காக்கும்
விரையப் பொருட்கள்...

"நானும் என் மனைவியும்"

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #11 on: March 27, 2013, 09:03:20 PM »
உங்க குட்டி கவிதை எல்லாமே நல்ல இருக்கு mystery :)

Offline MysteRy

Re: ~ குட்டிக்கவிதைகளை ~
« Reply #12 on: March 27, 2013, 09:20:07 PM »