சங்க இலக்கியங்கள் புரட்டி எடுத்து
காதல் காவியங்கள் திரட்டி தொடுத்து
மூன்றாம் பாலை கரைத்து குடித்து
மேவாய் வருடி ,வானம் பார்த்து
அமர்ந்து விட்டேன் உனக்கு கவிதை எழுத
எழுதி எறிந்த காகித குன்றுகளின் நடுவில் நான்
எப்படியோ எழுதி முடித்துவிட்டேன்
இப்படியோர் கவிதை இனியும் இல்லை
இதனினும் சிறந்த இனிப்பும் இல்லை..
படித்துவிட்டுச் சொல் பிடித்தது என்று
உன்னிடம் தர நான் எழுதிய ஓரெழுத்து கவிதை
" நீ "