Author Topic: உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே  (Read 760 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஒரு அழகான மயிலிறகாய் நாளும்
என் கனவின்
காற்று திசையில் பறந்தவளே
உன்னுடனான சந்திப்பு நிகழ்ந்த‌
இத்தருணத்தின் மலர்வில்
சாயமிழக்கிறது
செறிந்த தனிமை

இன்னும் தெரிவிக்காத‌
அல்லது நீ அறியாத‌
எனது பேரன்பின் வெளியில்
உனக்காகவே
துளிர்ப்பதற்கு காத்திருக்கிறது
எண்ணற்ற மழைகாலங்கள்

காய்தலற்ற பசுமையோடும்
வண்ணத்துப் பூச்சிகளின் பறத்தலோடும்
பனி படர்ந்த
குளிர்ந்த புல்வெளியை
உனக்காகவே
விரித்து வைத்திருக்கிறது மனது


மூச்சுக்காற்றுக்குள்
உன் நறுமணம் கமழ்கையில்
என் கைகளுக்குள்ளான‌
உன் இருப்பின் தருணத்தில்
உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
வைத்திருக்கிறேன்
யுகயுகங்களாய் தகித்துக் கொண்டிருக்கும்
என் தீராக்காதலை
அன்புடன் ஆதி

Offline Global Angel

Quote
மூச்சுக்காற்றுக்குள்
உன் நறுமணம் கமழ்கையில்
என் கைகளுக்குள்ளான‌
உன் இருப்பின் தருணத்தில்
உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
வைத்திருக்கிறேன்
யுகயுகங்களாய் தகித்துக் கொண்டிருக்கும்
என் தீராக்காதலை

ஹஹ்ஹா அழகான கவிதை வரிகள் ஆதி ... வார்த்தைகள் அருமை இந்த வரி என்று குறிப்பிட முடியாத அளவிற்கு எல்லா வரிகளுமே அருமை
                    

Offline PiNkY

மூச்சுக்காற்றுக்குள்
உன் நறுமணம் கமழ்கையில்
என் கைகளுக்குள்ளான‌
உன் இருப்பின் தருணத்தில்
உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே
வைத்திருக்கிறேன்
யுகயுகங்களாய் தகித்துக் கொண்டிருக்கும்
என் தீராக்காதலை

   angel sonna maari varigal ellam nandraaga irukirathu ithil ethu sirandahthendru kuripida mudiyavillai .. aanal,.., ennai migavum kavarnthathu indha varigal thaan.. nanbaa.. evvalavu kaadhal irundhal ivvalavu azhagaaga kavidai eludhi irupeergal..

Offline PiNkY

gtalk la ennoda status message uh unga kavidai varigalai thaan vaikka pogiren .. aadhi., andha alavukku nandraaga irukirathu