Author Topic: ஹோலி பண்டிகை கொண்டாடப் போறீங்களா? இத கொஞ்சம் படிக்கலாமே!!!  (Read 800 times)

Offline kanmani

இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று. இந்த ஹோலி பண்டிகை பெரும்பாலும் வட இந்தியாவில் தான் கொண்டாடப்படும். இந்த பண்டிகையின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக் கொண்டு விளையாடுவது தான். இதனை ஒரு வசந்த கால பண்டிகை என்றும் சொல்லலாம். இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தின் போது வண்ணப் பொடிகள் படாமல், இருக்க பலரும் முயற்சிப்பர். இருப்பினும் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தினால் சிலருக்கு உடல், சருமம் போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றி, ஹோலி பண்டிகையை நண்பர்களுடன் சிறப்பான முறையில் கொண்டாடி மகிழுங்கள்.

* தற்போது தாவரங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட நிறங்கள் கொண்ட பொடிகளை விட, ஆசிட், மைகா, கண்ணாடி துகள்கள் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட பொடிகள் அதிகம் விற்கப்படுகின்றன. எனவே சரியான பொடிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதனால் எந்த ஒரு அழற்சியும் ஏற்படாமல் இருக்கும்.

* வண்ணப் பொடிகள் தலையில் பட்டால், பின் தலையில் பொடுகு, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படும். எனவே பண்டிகையை கொண்டாடும் முன், தலைக்கு நன்கு தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு, பின் விளையாடினால், தலையில் வண்ணப் பொடிகள் தங்குவதை தவிர்க்கலாம். மேலும் தலைக்கு தொப்பியை அணிந்து கொள்வதும் சிறந்தது.

* வண்ண நிறப் பொடியானது கண்களில் பட்டால், பின் அவை கண்களுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனவே அவ்வாறு கண்களில் பொடியானது பட்டுவிட்டால், அப்போது உடனே குளிர்ந்த நீரால் கண்களை அலசிவிட வேண்டும். ஒருவேளை கண்களில் பொடி பட்டு, எரிச்சலுடன் வலியும் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

* ஹோலி பண்டிகையின் போது எந்த நேரமும் முகத்தில் வண்ண பொடியானது வீசப்படும். எனவே இந்த பண்டிகையின் போது, சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, முகத்திற்கு மாய்ச்சுரைசர் க்ரீம் அல்லது சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டால், எந்த ஒரு பாதிப்பும் சருமத்தில் ஏற்படாமல் இருக்கும்.

* உடல் முழுவதும், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டால், சருமத்தில் வண்ணப் பொடியில் உள்ள நிறமானது சருமத்தில் தங்காமல் தடுக்கலாம்.

* ஹோலியின் போது பாங்க் என்னும் பானம் அருந்தப்படும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அதிலும் குறிப்பாக ஆல்கஹாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.