அரிந்த செலரி தண்டுகள் - 2 கோப்பை
லீக்ஸ் - ஒரு கோப்பை
முட்டை - 2
காரம் இல்லாத பெரிய பச்சை மிளகாய் - 3
உப்பு - அரை தேக்கரண்டி
ப்ரெட்க்ரம்ஸ் - அரைக் கோப்பை
எண்ணெய் ஸ்ப்ரே
செலரி டிப் செய்ய:
சிறிதாக நறுக்கிய செலரி இலை - அரைக் கோப்பை
பச்சை மிளகாய் (விதை நீக்கி சிறிதாக நறுக்கியது) - ஒரு மேசைக்கரண்டி
ப்ளெய்ன் யோகர்ட் - அரைக் கோப்பை
உப்பு - ஒரு சிட்டிகை
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
செலரி தண்டுகளை மண்ணில்லாமல் கழுவி துடைத்து வைக்கவும். நடுவிலுள்ள பச்சை நிறத் தண்டுகளாகத் தெரிந்து, மெல்லிதாக அரிந்து வைக்கவும். லீக்ஸ்ஸின் இளம்பச்சைத் தண்டுப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொன்றாகப் பிரித்து, மண் இல்லாமல் கழுவித் துடைத்து எடுக்கவும். முடிந்த வரை மெல்லிதாக அரிந்து மெதுவே விரல்களால் உதிர்த்து விடவும். பச்சை மிளகாயையும் மெல்லிய வட்டங்களாக அரிந்து வைக்கவும்.
செலரியையும், லீக்ஸையும் கலந்து வைக்கவும்.
முட்டைகளை உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
நாண்ஸ்டிக் தட்டை எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். அது தயாராகும் சமயம், கலந்து வைத்து உள்ள செலரி & லீக்ஸுடன் அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்துக் குழைக்கவும்.
அரைக் கோப்பை ப்ரெட்க்ரம்ஸ் சேர்த்துக் குழைத்து இறுதியாக அரிந்து வைத்துள்ள மிளகாயைப் பரவலாகத் தூவிக் கலக்கவும்.
எண்ணெய் புகைய ஆரம்பித்ததும் கலவையில் ஒரு கரண்டி எடுத்து சிறிய வட்டங்களாகப் பரவி, மூடி வைத்து வேகவிடவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
செலரி டிப் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ப்ராசசரில் மிளகாயைப் போட்டு இரண்டு சுற்று ஓடவிட்டு அதனோடு செலரி இலையையும் சேர்க்கவும். இடைக்கிடையே வழித்து விட்டு, நீர் விடாமல் கூடுமானவரை சிறிதாக அரைத்து எடுக்கவும். அரைத்து எடுத்ததை யோகர்ட்டில் கொட்டி மெதுவாகக் குழைக்கவும். உப்பை பரவலாகத் தூவி மீண்டும் ஒரு முறை கலந்து விடவும். டிப் தயார்.
வேக வைத்து எடுத்த ஃப்ரிட்டர்ஸை செலரி டிப்புடன் சூடாகப் பரிமாறவும். இது மெல்லிய பச்சை நிறமாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.