மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு தேவையான சிற்றுண்டிகளை செய்து தருவது என்பது சற்று சிரமமான செயல்தான். சத்தான அதே சமயத்தில் எளிதான சிற்றுண்டி செய்து தருவதற்கு ஏற்றது ஓமப்பொடி. அரைமணி நேரத்திற்குள் செய்து விடலாம். நீங்களும் செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்
ஓமம் – 50 கிராம்
கடலை மாவு – 4 கப்
பச்சரிசி மாவு – 2 கப்
காரப்பொடி – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 கப் ஓமப்பொடி
செய்முறை
ஓமத்தை நன்கு அரைத்துக் கொண்டு, சாறு பிழிந்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, காரப்பொடி, உப்பு ஆகியவற்றுடன் ஓமம் சாறையும் சேர்த்து, சூடான எண்ணெய், நெய் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும். எண்ணெய் காய்ந்த உடன் ஒமப்பொடி அச்சில் இந்த மாவுக் கலவையைப் போட்டு, எண்ணெயில் பிழிய வேண்டும்.
வெந்தவுடன் எண்ணெயை வடித்து எடுக்க கரகரப்பான சுவையான ஒமப்பொடி தயார். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து மேலே தூவி பரிமாறலாம்.