சாண்ட்விச்சை காலை அல்லது மாலை வேளையில் சாப்பிடக் கூடியவாறு இருக்கும் ஒரு ரெசிபி என்று சொல்லலாம். ஏனெனில் பலர் இதனை காலை வேளையில் அவசரமாக செய்து சாப்பிட்டு அலுவலகத்திற்கு செல்கின்றனர். சிலர் இதனை மாலையில் பொறுமையாக செய்து, ருசித்து சாப்பிடுகின்றனர்.
இப்போது அத்தகைய சாண்ட்விச்சில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு இனிப்பாக இருக்கும் சாக்லெட் சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 4
சீஸ் துண்டுகள் - 2
சாக்லெட் துண்டுகள் - 2 (நீளமானது)
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஓர் பிரட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெய் தடவி, பின் அதன் மேல் சீஸ் துண்டுகளை வைக்க வேண்டும்.
பின்னர் மற்றோரு பிரட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெய் தடவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து சீஸ் வைத்துள்ள பிரட் துண்டின் மீது சாக்லெட் துண்டுகளை வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவியுள்ள பிரட்டை வைத்து மூட வேண்டும்.
பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் இந்த பிரட்டை சாக்லெட் உருகும் வரை, முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான சாக்லெட் சீஸ் சாண்ட்விச் ரெடி!!!