Author Topic: மசாலா பிரட் டோஸ்ட்  (Read 602 times)

Offline kanmani

மசாலா பிரட் டோஸ்ட்
« on: March 20, 2013, 05:23:06 AM »
காலை உணவு மிகவும் இன்றியமையாதது. ஒருவரின் உடலுக்கு தேவையான சக்தியானது, காலை உணவைப் பொறுத்து தான் உள்ளது. எனவே எந்த நேரம் சாப்பிடாமல் இருந்தாலும், காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது.

பெரும்பாலானோர், காலையில் எழுந்து சமைத்து சாப்பிட சோம்பேறித்தனப்பட்டோ அல்லது அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று சரியாக சாப்பிடாமல் செல்கின்றனர். அத்தகையவர்களுக்கு எளிதான முறையிலும், ஆரோக்கியமான வகையிலும் பிரட்டை வைத்து ஈஸியான முறையில் ஒரு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

பொதுவாக பிரட்டை சாதாரணமாக டோஸ்ட் செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் அந்த பிரட்டுடன் முட்டையை சேர்த்து எப்படி ஒரு மசாலா பிரட் டோஸ்ட் செய்வதென்று பார்ப்போமா!!!

 தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 6-8
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
முட்டை - 3
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தக்காள் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து, அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.

பின்பு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும தக்காளி சாஸ் சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.

 பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், பிரட்டில் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்ய வேண்டும்.

 பின் செய்து வைத்துள்ள மசாலாவை டோஸ்ட் செய்த ஒரு பிட்டின் மேல் வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து பரிமாற வேண்டும்.

இப்போது சுவையான மசாலா பிரட் டோஸ்ட் ரெடி!!!