Author Topic: பள்ளிபாளையம் சிக்கன்  (Read 699 times)

Offline kanmani

பள்ளிபாளையம் சிக்கன்
« on: March 18, 2013, 12:49:27 PM »
என்னென்ன தேவை?

சிக்கன் 1 கிலோ
சின்னவெங்காயம்-கால்கிலோ
வரமிளகாய்-10(உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிடவேண்டும்)
தேங்காய்-1(சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்)
சிக்கன் மசாலா-50 கிராம்
எண்ணெய்-6 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள், உப்பு- தேவையான அளவு
எப்படிச் செய்வது?

சிக்கனை சுத்தம் செய்து விட வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணை விட்டு கடுகு போடவும். கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு ஒரு  நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதன் பின்னர் சிக்கனை போட்டு வதக்கவும்.  மஞ்சள் தூள், சிக்கன் மசாலா  சிறிது போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.

அடி பிடிக்காமலிருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். தேவையான அளவு உப்பு போட்டு 20 நிமிடம் வேகவிட்டு சிறிது தண்ணீர் விட்டு  வேகவிடவேண்டும். சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி கருவேப்பிள்ளை போட்டு இறக்கவும். இப்போது சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.