Author Topic: கத்தரிக்காய் - காளான் கறி  (Read 585 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் - கால் கிலோ,
காளான் - 100 கிராம்,
வெங்காயம் - 3,
தக்காளி - 3,
இஞ்சி, பூண்டு, சோம்பு சேர்த்தரைத்த விழுது - சிறிது,
தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

வெங்காயம், கத்தரிக்காய், காளான் எல்லாவற்றையும் நீள வாக்கில் நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கத்தரிக்காய், காளான், தக்காளி என வரிசையாக ஒன்று வெந்ததும், இன்னொன்று சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். மிளகாய் தூள் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும். கத்தரிக்காய் வெந்ததும், இஞ்சி, பூண்டு, சோம்பு விழுது சேர்த்து, பச்சை வாடை போக வதக்கவும். இறக்கும் முன் தேங்காய்த் துருவலையும் கறிவேப்பிலையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.