என்னென்ன தேவை?
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மிளகு - 5 டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
புளி - எலுமிச்சை அளவு,
குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கடுகு, வெந்தயம் - தாளிக்க,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
மிளகை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாடை போக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இறக்கவும்.