Author Topic: கத்தரிக்காய் சட்னி  (Read 604 times)

Offline kanmani

கத்தரிக்காய் சட்னி
« on: March 18, 2013, 12:31:01 PM »
என்னென்ன தேவை?

கத்தரிக்காய் - 4,
க்காளி - 2,
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப, 
மஞ்சள் தூள் - சிறிது,
மிளகுத் தூள் - சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.  வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கடைசியில் சிறிது மிளகுத் தூள்  தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்). கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும். வாரம்  இருமுறை சாப்பிடலாம்.