வாழைப்பூ காரக்குழம்பு
என்னென்ன தேவை?
வாழைப்பூ - (ஆய்ந்து சுத்தம் செய்து நரம்பு நீக்கியது) - 1 கப்,
சாம்பார் வெங்காயம் - அரை கிலோ,
தக்காளி - அரை கிலோ,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - 4 டீஸ்பூன்.
தாளிப்பதற்கு...
எண்ணெய் - கால் கப்,
பட்டை - 3,
கிராம்பு - 3,
மராட்டி மொக்கு - 2,
அன்னாசிப்பூ - 1,
கடுகு - 1 டீஸ்பூன்,
சோம்பு- 1 டீஸ்பூன்.
எண்ணெயில் வறுத்து அரைக்க...
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை - அரை கப்,
தேங்காய் - 1 மூடி (துருவியது),
சோம்பு- 1 டீஸ்பூன்,
அனைத்தையும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு துண்டு இஞ்சியுடன் 8 பல் பூண்டு சேர்த்துத் தனியே அரைத்துக் கொள்ளவும்.
மாவு தயாரிக்க...
கடலை மாவில் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்.
வாழைப்பூவை தயாராக கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி பஜ்ஜி மாதிரி பொரிக்கவும்.
எப்படிச் செய்வது?
எண்ணெயைக் காயவைத்து தாளிப்பு சாமான்கள் ஒவ்வொன்றாகப் போட்டு, நன்றாக வெடித்தபின், சாம்பார் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பிரவுன் கலராக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்தூள் சேர்த்து, பின் புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து வரும்போது, அரைத்த விழுதையும் கொதிக்கும் குழம்பில் சிறிதளவு தண்ணீர்விட்டு கலக்கி விடவும். குழம்பு கெட்டியாக ஒன்று சேர்ந்து கொதித்தவுடன் கீழே இறக்கி வைத்து, பொரித்த வாழைப்பூ பஜ்ஜியை போட்டுப் பரிமாறவும்.