Author Topic: ஃபெஹி போகிபா  (Read 703 times)

Offline kanmani

ஃபெஹி போகிபா
« on: March 18, 2013, 11:16:04 AM »

    மைதா - முக்கால் கப்
    நீர் - 2 கப்
    பந்தன் / ரம்பை இலை - ஒன்று
    சர்க்கரை - அரை கப்
    வெங்காயம் - கால் பாகம்
    ஏலக்காய் - 5
    தேங்காய் - பாதி
    கானாமது பாதாம் - 10
    எண்ணெய் - தேவைக்கு

 
   
தட்டிய ஏலக்காயுடன் பந்தன் இலை சேர்த்து 2 கப் நீர் விட்டு கொதிக்க விட்டு ஆற விடவும். அவனை 200 C’ல் முற்சூடு செய்யவும்.
   
மைதாவுடன் சர்க்கரையை கலந்து வைக்கவும்.
   

தேங்காயுடன் ஆறவைத்த பந்தன் இலை நீரைச் சேர்த்து அரைத்து வடிகட்டி 2 கப் முதல் பால் எடுத்து, மைதா, சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.
   

இந்த கலவை ஒன்று போல் கலந்து கொள்ள அதை மிக்சியில் சுற்றி எடுக்கவும்.
   

பின் கலவையை பேக்கிங் ட்ரேவில் ஊற்றவும். ட்ரேவில் ஊற்றினால் அதிக பட்சம் ஒன்றரை இன்சுக்கு மேல் கலவை இருக்கக்கூடாது. அந்த அளவிற்கேற்ற ட்ரேயை பயன்படுத்தவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து மேலே தூவவும். பாதாமையும் பொடியாக நறுக்கி தூவவும்.
   

இதை அவனில் வைத்து 15 - 30 நிமிடம் (கலவை ஊற்றிய திக்னஸை பொறுத்து மாறுபடும்) அல்லது உள்ளே விட்ட டூத் பிக் சுத்தமாக வெளியே வரும் வரை பேக் செய்து எடுக்கவும்.
   

நன்றாக ஆறிய பின் துண்டுகள் போடவும். சுவையான மாலத்தீவின் ஃபெஹி போகிபா தயார்.

 
இதில் மிக்சியில் அரைப்பதால் நல்ல ஸ்மூத் ஃபினிஷ் கிடைக்கும். இந்த கேக் உள்ளே பஞ்சு போல் இருக்காது. அதனால் ஆறும் முன் எடுத்தால் வராது. பேக்கிங் ட்ரேயை விட்டு எடுக்கும் முன்பே நன்றாக ஆறி இருக்க வேண்டும். இல்லையெனில் ஒட்டிக்கொண்டு சரியாக வராது. மிகவும் சாஃப்டாக பந்தன் இலை மற்றும் தேங்காய் பாலின் மணம் அருமையாக இருக்கும்.