Author Topic: மேங்கோ ரசகுலா  (Read 741 times)

Offline kanmani

மேங்கோ ரசகுலா
« on: March 16, 2013, 12:10:14 AM »
மேங்கோ ரசகுலா

குலாப் ஜாமூன் என்றாலே அனைவருக்கும் நா ஊறும். அந்த அளவு தான் ரசகுலா என்றாலும். பொதுவாக ரசகுலாவானது மேற்கு வங்காளத்தில் மிகவும் பிரபலமானது. அதிலும் ரசகுலாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதுவும் விருப்பத்திற்கு ஏற்றவாறு, பிடித்த எசன்ஸ் பயன்படுத்தி, எந்த விதமான ரசகுலாவையும் செய்யலாம்.

இப்போது அவற்றில் கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து செய்யக்கூடிய மேங்கோ ரசகுலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சீஸ் - 2 கப் (துருவியது)
மைதா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1/2 கப்
மாம்பழ கூழ் - 1 கப்
மேங்கோ எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
 பிஸ்தா - 7-8 (துருவியது)

செய்முறை:

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் சீஸ், மைதா, பால் மற்றும் மாம்பழ கூழ் மூன்றையும் சேர்த்து கெட்டியாக கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் அடுப்பில் ஒரு சிறு பாத்திரத்தை வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு அந்த பாகுவின் மேல் இருக்கும் ஆடை போன்றதை ஒரு ஸ்பூன் வைத்து எடுத்துவிட்டு, தீயை குறைவில் வைத்து, அதில் மெதுவாக உருட்டி வைத்துள்ள ரசகுலாவை ஒவ்வொன்றாக போட்டு, 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

அவ்வாறு மூடி வைக்கும் போது, அவ்வப்போது அந்த உருண்டையின் அளவு பெரிதாகிறதா என்று பார்க்க வேண்டும்.

உருண்டையானது பெரிதாக வந்தால், அப்போது மேங்கோ எசன்ஸ் சேர்த்து கலந்து ஒரு முறை கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

இப்போது மேங்கோ ரசகுலா ரெடி!!! இதன் மேல் பிஸ்தாவை தூவி பரிமாற வேண்டும்.