ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
1. சோற்றுக் கற்றாழையய் இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.வாரத்திற்க்கு இரண்டு முறை இவ்வாறு செய்யவும் .அப்புறம் என்ன நரைமுடி போயே போச்சு
2.சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களை அரைத்து தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம் இதனால் முடி உதிர்வும் படி படியாக குறையும்
3.வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
4. மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலு மிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனை த்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைகாய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீ ரில் கழுவ வேண்டும். குறிப்பாக ம ருதாணியை போடு வதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல் லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இங்கு சிகக்காய்க்கு பதிலாக 2 வது குறிப்பில் சொல்லிய முரயை பயன்படுத்தி சிகக்காய் தயாரித்து பயன்படுத்தவும்.
சில வைத்தியம்:
1. பெரிய நெல்லிகாயை சாரெடுத்து 1 மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெயில் 1 தேக்கரண்டி அளவு கலந்து தலையில் மசாஜ் பண்ணலாம்.
2. நெல்லிகாய் தினமும் சாப்பிடலாம். அனீமிக், விடமின் ப் குறைபாடு போகும்.
3. நெல்லிகாயை சிறு துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து ஆரவைத்து அந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
4. கறிவேப்பிலையை உணவில் சேர்க்கலாம்.
5. கறிவெப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆற வைத்து தேய்க்கலாம்.