Author Topic: வெஜிடேபிள் ஆம்லெட்  (Read 685 times)

Offline kanmani

வெஜிடேபிள் ஆம்லெட்
« on: March 14, 2013, 10:16:37 PM »
காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நிறைய பேர் காலை உணவு செய்ய அதிக நேரமாகிறது என்று, பல முறை சாப்பிடாமல செல்கின்றனர். ஆனால் அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால், உடல் தான் பாதிக்கப்படும். எனவே ஈஸியாக சமைத்து காலையில் சாப்பிட வேண்டுமெனில் அதற்கு ஆம்லெட் சரியாக இருக்கும்.

ஆம்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் ஆம்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

முட்டை - 2-3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பீன்ஸ் - 1 (நறுக்கியது)
மிளகு தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 பின் அதில் பால், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.

கல்லானது சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, முன்னும், பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான வெஜிடேபிள் ஆம்லெட் ரெடி!!!