Author Topic: ~ அன்பியல் ~  (Read 5902 times)

Offline MysteRy

~ அன்பியல் ~
« on: March 14, 2013, 09:13:00 AM »
சிறு ஸ்பரிசம்
சொல்லி விடுகிறது
கடலளவு நேசத்தை ....!



Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #1 on: March 14, 2013, 09:13:58 AM »
சாந்தமாக பார்க்கிறாய்
வடிகிறது
என் கோபம்


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #2 on: March 14, 2013, 09:14:37 AM »
உதவி செய்ய
முக்கிய தேவை
மனம்!


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #3 on: March 14, 2013, 09:15:41 AM »
உலகில் பேசிக் கொள்ள
ஆயிரம் மொழிகள்
இருந்தாலும் ..
நாம் பேசிக் கொள்ள
அன்பு என்ற
மொழி போதுமானது :)



Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #4 on: March 14, 2013, 09:17:00 AM »
சுமையாய் இருப்பதை விட,

சுமை தாங்கியாய் இருப்பதில்

ஒரு சுகம் உள்ளது......



Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #5 on: March 14, 2013, 09:18:33 AM »
கோர்க்கும் விரல்களில்
தானாக
ஈர்ப்பும் சேர்வது
என்ன விந்தையோ
என் செல்ல மகனே[ளே]...



Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #6 on: March 14, 2013, 09:19:41 AM »
நேசித்தல் என்பது சடங்கல்ல,
மனித இயல்பு.. ♥


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #7 on: March 14, 2013, 09:21:12 AM »
அனாதரவான மான்குட்டியை எடுத்து வளர்க்கும் சிங்கம் (கண் கலங்க வைக்கும் படங்கள்)

மனதை உருக்கும் இப்படங்கள் 50 வயதான Adri De Visser, எனும் படப்பிடிப்பாளரால் உகண்டாவிலுள்ள Queen Elizabeth National Park, இல் எடுக்கப்பட்டவை , பெண் சிங்கமொன்று அனாதரவான மான் குட்டியை எடுத்து வளர்த்துவருகிறது.

இந்த மான்குட்டியின் தாய் இதே சிங்கத்தால் உணவுக்காக கொல்லப்பட்ட போது பிறந்திருந்தது, அன்று முதலே அதன் மீது அன்பு செலுத்தி வருகிறதாம் பெண் சிங்கம், தாயைக் கொன்ற குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்,

மான்குட்டியும் சிங்கத்தை தாயாக நினைத்து வருவதால் அதன் அரவனைப்பையே என்றும் விரும்புகிறது, சிங்கமும் தனது குட்டியைப் போலவே வாயால் கவ்விக் கொண்டு செல்வதும் காண்போரை கண்கலங்க வைக்கிறதாம்.

பாசமென்று வந்துவிட்டால் சிங்கமென்ன மானென்ன எல்லாமே ஒன்றுதான்!


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #8 on: March 14, 2013, 09:22:15 AM »
குறைகளை
தீர்ப்பதும் கேட்பதும் தான்
கடவுள் என்றால்
நண்பன் தான்
உண்மையான கடவுள்





Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #9 on: March 14, 2013, 09:23:51 AM »
நேசியுங்கள்....
உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சையும் நேசியுங்கள்...உலகத்தில் இனிமேல் நேசிக்க எதுவும் இல்லை எனும் அளவு... ♥


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #10 on: March 14, 2013, 09:25:56 AM »
அடித்துவிட்டு அப்பா வாங்கித் தரும்
இனிப்பிலும்

திட்டிவிட்டு அம்மா பொழியும்
அன்பிலும்

ஊடல் முடிந்து கூடலில் காதலி தரும்
முத்தத்திலும்

அன்பைக்காட்டிலும் அதிகம்
நேசிப்பை பெறுகிறது கோபம்!


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #11 on: March 14, 2013, 09:27:08 AM »
எல்லோரும் தனக்குள் ஓர் இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே ....
யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான் ♥ ♥



Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #12 on: March 14, 2013, 09:28:15 AM »
உண்மையான
உணர்வுகள்
இருந்தால்
வார்த்தைகள் தேவை இல்லை
நினைவுகள் கூட அன்பாக பேசும் ...


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #13 on: March 14, 2013, 10:51:06 AM »
பழம் விட்டதும்
பழசை மறப்பது
குழந்தைகள் மட்டுமே...


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #14 on: March 14, 2013, 10:54:44 AM »
"நீ விரும்பும் உள்ளம்
விலகி சென்றாலும்
நீ துரத்தி செல்லாதே
விட்டு விடு....

உன்னை விரும்பிவரும்
உள்ளத்தை நீ
தவிக்க விடாதே"