Author Topic: ப்ரெட் ஜாமூன்  (Read 698 times)

Offline kanmani

  • FTC Team
  • Classic Member
  • ***
  • Posts: 12428
  • Karma: +1/-0
  • Gender: Female
ப்ரெட் ஜாமூன்
« on: March 13, 2013, 06:45:30 AM »


    ஸ்வீட் ப்ரெட் - ஒரு பாக்கெட்
    வெதுவெதுப்பான பால் - தேவையான அளவு
    சர்க்கரை - 300 கிராம்
    ஏலக்காய் - நான்கு
    ரெட் புட் கலர்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

 

    முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    ப்ரெட்டின் ஓரங்களை கத்தி அல்லது கட்டர் கொண்டு முழுவதுமாக வெட்டி எடுக்கவும்.
    ஓரம் நீக்கப்பட்ட ப்ரெட்டை சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுக்கவும்.
    அதனுடன் வெதுவெதுப்பான பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து 5 அல்லது 10 நிமிடம் ஊற விடவும்.
    சர்க்கரையுடன் புட் கலர், பொடி செய்த ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து உருட்டும் பதம் அளவு பாகு காய்ச்சி கொள்ளவும்.
    பிசைந்த மாவினை விரும்பிய வடிவில் உருட்டிக் கொள்ளவும்.
    அடுப்பில் எண்ணெயை நன்கு கொதிக்க விட்டு, தீயை குறைத்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
    பிறகு பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை பாகு உள்ள பாத்திரத்தில் போட்டு 2 மணி நேரம் நன்கு ஊற விடவும்.
    சுவையான ஈஸி ஃப்ரெட் ஜாமூன் ரெடி.