Author Topic: ஈஸி பட்டாணி சீரக ரைஸ்  (Read 591 times)

Offline kanmani

ஈஸி பட்டாணி சீரக ரைஸ்
« on: March 13, 2013, 06:44:44 AM »

    பாசுமதி அரிசி - 2 கப்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
    ஃப்ரோசன் பட்டாணி - அரை கப்
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    எண்ணெய் - தாளிக்க
    உப்பு

 

    முதலில் அரிசியைக் கழுவி உப்பு போட்டு உதிரியாக வடித்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
    வாயகன்ற தவாவில் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    வெங்காயம் பாதி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
    பச்சை வாசனை போனதும் பட்டாணி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து 10 நிமிடம் அடுப்பை குறைத்து வைக்கவும்.
    பின் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து சாதம் உடையாமல் கீழிருந்து மேலாக பிரட்டி விட்டு, தேவையெனில் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
    ஈஸி பட்டாணி, சீரக ரைஸ் தயார்.

Note:

மதியம் மீதமான சாதத்திலும் இதைச் செய்யலாம். தயிர் பச்சடி, உருளை வறுவல் நல்ல காம்பினேஷன். ஃப்ரோசன் பட்டாணிக்கு பதில் சாதாரண பச்சை பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் வேக வைத்தும் பயன்படுத்தலாம். லன்ச் பாக்ஸிற்கு ஏற்ற சாதம் இது.