Author Topic: சுறா மீன் குழம்பு  (Read 1605 times)

Offline kanmani

சுறா மீன் குழம்பு
« on: March 13, 2013, 06:42:52 AM »

    சுறா மீன் - அரை கிலோ
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    மல்லித் தழை - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
    அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி
    தயிர் - கால் கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

 

மீனை சுத்தம் செய்து கொதி நீரில் போட்டு எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த தேங்காயில் உப்பு, தனியா தூள், மிளகு, சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
   

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும்.
   

வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தழை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

பின் தயிர் சேர்த்து வதக்கவும்.
   

கரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின் சிறு தீயில் 15 நிமிடம் வைத்து மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
   

எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.