தக்காளி உருளை கடைசல்
தக்காளி - 3
உருளைக்கிழங்கு - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மல்லித் தழை
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
தக்காளி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.
அதனுடன் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். ஓரளவு வதங்கியவுடன் உப்பு சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் மத்தினால் நன்கு கடைந்து விட்டு மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி உருளை கடைசல் தயார். சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.