பஜ்ஜி மிளகாய் (அ) காரம் குறைவான மிளகாய் - 10
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். மிளகாயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.
சீரகம், வெந்தயம், கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு சேர்த்து வேக விடவும்.
மிளகாய் வெந்ததும் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து கிளறவும்.
அனைத்தும் சேர்ந்து நன்றாக சுருள வதங்கியதும் இறக்கவும்.
சுவையான மிளகாய் ஊறுகாய் தயார். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதனுடன் தயிர் சேர்த்து கலந்து, சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.