தனித் தீவின் கரைகளை போல்
அவ்வப்போது உன்
உடல் தீவின் கரைகளை
எட்டிப் பார்க்கிறது
என் எண்ண அலைகள் ..
உன் நெஞ்சில் நுரையாக
என் எண்ண நுதல்கள்
ஒட்டி என் தேக வெப்பத்தை
உள் உறிஞ்சி
என்னுள் உறுதியை
உடைத்து சிலிர்க்கிறது ..
கரை தடவும் நண்டுகள் போல்
நுரை தடவி நுதல் தடவி
இதழ் கரை கடந்து
காம சந்துக்குள்
ஒளிந்து கொள்ள துடிக்கிறது
ஒற்றை விரல் ...
செவி கடந்து கேட்கும்
அலை கடலின் ஓசையை போல்
உன் இடை படர்ந்து
இசைபாட துடிக்கிறது
என் இன்ப லயம் ...
வா வந்துவிடு
என் வளை கரத்துள்
வசமிழந்து
வாய் குளறும் பொழுதுகள் நீள்வதட்காய் ...