ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா கின்னஸ் சாதனை படைத்தார் !!!
இமைய மலையின் சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனைகளை நிலைநாட்டியவர்கள் பலர் ஆனாலும் புதிதாக ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது இந்த எவரெஸ்ட் சிகரத்தில் அதாவது ஒரு சீசனில்
ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா
ஒரே சீசனில் இரு தடவைகள் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் பெண் வீராங்கனை சுரிம் ஷெர்பா
ஒரு பெண் இரு தடவைகள் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட பெருமையை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த செய்தியில்,
இமயமலையில் உள்ள உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு முதன் முதலில் சென்று சாதனை படைத்தார்கள் எட்மன்ட் ஹில்லாரி, டென்ஜிங் நார்வே ஆகியோர். இவர்கள் கடந்த 1953ம் ஆண்டு இந்த உலக சாதனையை படைத்தனர்.
அதன் பின்னர், இதே சாதனையை சுமார் 3 ஆயிரம் பேர் செய்துள்ளனர். ஆனால், குறிப்பிடத்தக்க வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை. 29 ஆயிரத்து 28 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பயிற்சி பெறும் முகாம்கள் ஆண்டுக்கு ஓர் முறை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாமில் நேபாள நாட்டை சேர்ந்த சுரிம் ஷெர்பா (29) என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு பத்திரமாக தரைப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஓரிரு நாட்கள் மட்டும் இமயமலை அடிவாரத்தில் ஓய்வெடுத்த அவர், மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து ஒரே சீசனில் தொடர்ந்து 2 முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இது போன்றதொரு சாதனையை படைக்க முயன்ற ஷெர்பா பசாங் லாமு என்ற பெண் மலையில் இருந்து இறங்கி வரும் போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.