இரு கரங்களின்றி சிறந்த கையொழுத்திற்கான விருது பெற்ற சிறுமி !!!
சாதிப்பதற்கு கை முக்கியம் அல்ல தன்னம்பிக்கை தான் முக்கியம் என்று இந்த சிறுமி நமக்கு உணர்த்தி இருக்கிறாள் . எல்லா தகுதியும் இருந்தும் காலம் நேரத்தை குறை கூறிக்கொண்டு இருப்பவர்களின் மத்தியில் இப்படியும் சாதனை படைத்து கொண்டு தான் இருக்கிறார்கள் உலகில் ..
இரு கரங்களின்றிப் பிறந்த சீனாவைச் சேர்ந்த அன்னி கிளார்க்(7) என்ற சிறுமி மிகச் சிறந்த கையெழுத்திற்கான தேசிய விருதை அமெரிக்காவில் வென்றுள்ளார்.
மாணவர்களின் கையெழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் அமெரிக்காவில் தேசிய அளவில் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
அன்னி கிளார்க் வென்றுள்ள இப்போட்டியில் சுமார் 25 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் வென்றவர்களுக்கு விருதாக ஒரு கேடயம், ஆயிரம் டொலர்கள் பணப்பரிசும் வழங்கப்படும்.
இந்நிலையில் இப்போட்டியில் வென்ற அன்னி கிளார்க், எவ்வாறு எழுதுகிறாள் என்பதை அங்குள்ளவர்களுக்கு விளக்கும் முகமாக தனது இரு முழங்கைகளுக்கு கிடையிலும் பென்சிலைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்து சிறப்பாக எழுதிக் காட்டினார்.